திருவலஞ்சுழி

கும்பகோணத்துக்கு மேற்கே 6 கி. மீ. தொலைவில் சுவாமிமலைக்கு செல்லும் வழியில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இத்தலத்தில் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கடல்நுரையினால் ஆன வெள்ளைப் பிள்ளையார் சிறப்பு வாய்ந்தவர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டும் சாத்தப்படுகிறது. திருவிடைமருதூருக்கு உரிய பரிவாரத் தலங்களுள் இத்தலம் விநாயகருக்கு உரிய தலம். ஒரு காலத்தில் பூமிக்குள் புகுந்து சென்ற காவிரி நதியை மேலே வருமாறு செய்வதற்கு காவிரி உள்ளே செல்லும் பாதாளத்தில் ஏரண்ட முனிவர் இறங்கினார். உடனே பாதாளம் மூடி காவிரி மீண்டும் மேலெழுந்து வலமாக சென்றதால் இத்தலம் 'திருவலஞ்சுழி' என்று பெயர் பெற்றது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com